Monday, July 23, 2012

குழந்தையும் தெய்வமும்

சில சமயங்களில் குழந்தைகள் தெய்வங்களாக தெரிவார்கள். நாம் தான் மனிதர்களாக அதை உணராமல் இருக்கிறோம்.
 
என் பெண்ணின் போர்வையை துவைத்து வைத்து இருந்தோம். அவள் அதை பார்த்து யார் செய்ததது என்று கேட்க, கலா பாட்டி என்று கூறினோம் (கலா எங்கள் வீட்டில் வேலை செய்பவர்). இவள் வேகமாக சென்று நன்றி கூறி விட்டு வந்தாள். எதற்கு என்று கேட்டதற்கு, போர்வைக்கு வாய் இல்லை தானே என்று பதில் வந்தது.
 
சின்ன ஒரு செயலில் தெய்வத்தை காட்டிய என் பெண்ணின் முன் நான் மிகவும் சிறியதாக தெரிந்தேன்.

Friday, July 20, 2012

Vipanai


“அக்கா, ஒரு புக் பத்து ரூபா தான் அக்கா. ஒண்ணு வாங்கிக்கோங்க!!! வீட்ல சின்ன பசங்க கலர் அடிக்கற புக் வாங்கிகோங்க அக்கா.”
“வேண்டாம்பா. சும்மா தொந்தரவு பண்ணாத. வேற யார் கிட்டயாச்சும் கேளு”
“அக்கா. ப்ளீஸ் அக்கா.”
“வேண்டாம்னு சொல்றேன் இல்ல. இப்போ போறியா இல்லையா”
“ச்சே. இந்த பசங்க தொல்ல தாங்கல. பஸ் வேற வந்து தொலைய மாட்டேங்குது. சீக்கிரம் வந்த வேலைய முடிச்சிட்டு சீக்கிரம் வீட்டுக்கு போலாம்”
ஸ்டாப்பில் இறங்கி வீட்டு கதவை தட்டினாள்.
“யாரு”
“மேடம். நான் சூப்பர் சோப்பு கம்பெனில இருந்து வரேன். ஒரு சோப்பு வாங்கி பாருங்க மேடம். ரொம்ப நல்லா இருக்கும்”
“வேண்டாம்மா. சும்மா தொந்தரவு பண்ணாத. வேற யார் கிட்டயாச்சும் கேளு!!!!!!”

கேள்வி


குழந்தைகளின் கேள்விக்கு
விடை தெரியாததை விட
நாம் அப்படி கேட்டதில்லையே
என்ற காரணத்திற்காகத்
தான் கோபம் வருகிறதோ!!!

Tuesday, June 26, 2012

உதை

‘அம்மா நீ உதை வாங்கி இருக்கியா?’ – என்றேன். ‘அதெல்லாம் பொண்ணுங்களுக்கு வழக்கமா நடக்கற ஒண்ணு தான். நீயும் வாங்குவ’ என்றாள்.
என் தோழி சொன்னதில் இருந்து எப்போது உதை வாங்குவோம் என்று காத்திருந்தேன். ‘நிறைய பேர் பிற்போக்குதனம்பாங்க. அனுபவிச்சு பாத்தாதான் அந்த சுகம் தெரியும்’.
‘ஏன் எல்லார் பேச்சை கேட்டுட்டு உளர்ற?’ என்று என்னவரின் கோபம் எல்லை மீறி போன போது ஒரு உதை விழுந்தது.
‘உதை கிடைச்சிடிச்சி!’ என்று கூறியபடியே என் 5 மாத வயிற்றை ஆசையாய் வருடிக்கொண்டேன்.

அம்மா

பாட்டி வீட்டுக்கு சென்ற என்
பெண்ணிடம் பேச முயற்சித்து
தோற்கும் போதெல்லாம்
‘ஏன் தொலைபேசியில் அழைக்க
மாட்டேன் என்கிறாய்’ என்று
கேட்ட அம்மாவின் குரல்
ஏனோ காதில் அறைகிறது!!

அம்மா வீடு

புதிதாய் முளைத்த கடைகள்
பற்பல நட்சத்திர உணவகங்கள்
குளிரூட்டப்பட்ட பன்மாடி அங்காடிகள்
மெட்ரோ, மெகாமார்ட் கிளைகள்

நீண்ட இடைவெளிக்கு பின்
அம்மா ஊரை பார்த்த போது
ஏனோ இந்த மாற்றங்கள்
சந்தோஷத்தோடு சேர்த்து
இடைவெளியையும்
பொறாமையையும்
கொடுக்கிறது!!!

Saturday, June 9, 2012

தானே


சாலைக்கு வந்த கடல்
  பாலைவனமான நெய்வேலி
புரட்டிபோடபட்ட புதுச்சேரி
  கலங்கிப் போன கடலூர்
சின்னபின்னமான சிதம்பரம்
  நடவெல்லாம் நீருகிரையான நாகை
3000 கோடி அழிவு
  46 உயிர்கள் பலி
லட்சம் மரங்கள் சாய்வு
  50000 வீடுகள் இடிந்தது
நிவாரண நிதி
  அறிவித்ததுடன்
அரசாங்கத்தின்
  கடமை முடிந்தது
ஆழ்ந்த வருத்தம்
  தெரிவித்ததுடன்
பிரதமரின் வேலை
  நிறைவுற்றது
பச்சாதாபப் பட்டதுடன்
  நம்முடைய அடுத்த
வேலை தொடங்கியது
அங்கே வீடிழந்த
  என் சகோதரன்
என்று எழுவான்?
இங்கே கடன் வாங்கி
  பயிர் செய்த விவசாயி
என்று மீளுவான்?
அடி மேல் அடி
  வாங்கும் மீனவனின்
 அடுத்த நாள் எப்படி?
தானே வந்து நாசம்
  செய்த தானே -
உன் பதில் என்ன?

விபத்து



படகு கவிழ்ந்து 27 பேர் பலி
 
தேவைக்கு அதிகமான மக்கள்
ஏறியதால் என்ற பதில்
பஸ் விபத்தில் 32 பேர் பலி
 பேருந்து சரியான பாதையில்
செல்லவில்லை என்ற காரணம்
ரயில் விபத்தில் 127 பேர் பலி
 ஓட்டுனர் பேசிக்கொண்டே
ஓட்டியதால் என்ற விளக்கம்
யாரை குற்றம் சொல்வது
படகோட்டியின் பேராசையா?
 இல்லை அவன் சமாளிக்க
வேண்டிய விலைவாசியா?
பேருந்து ஓட்டுனரின் இயலாமையா?
 இல்லை நேரத்துக்கு சேர
வேண்டும் என்ற கட்டளையா?
ரயில் ஓட்டுனரின் அலட்சியமா?
இல்லை இன்று எத்தனை மரணம்
என்று கேட்கும் அளவு நாம்
கல்லாகி போனதின் எதிரொலியா!!!!

வரிசை


அதிகாலை சூரியனில்
கை கால் முகம் கழுவி
தோளில் மண்வெட்டி சுமந்து
எதிர் வீட்டு அண்ணன்
மேலத் தெரு சித்தப்பா
கீழத் தெரு மாமா
எல்லோரும் காலை வயலுக்கு
சென்று வேலை முடித்து
வரும் சந்தோஷமே தனி!!
இன்று அதிகாலை மாறவில்லை
தோளில் மண்வெட்டியும் மாறவில்லை
அந்த வரிசை மாறவில்லை
கை கால் முகம் கழுவி
அதே வரிசையில் சென்றோம்
பட்டணத்தில் பாலம் கட்ட….

Rewind Button


வாழைபழ தோல்
   வேர்கடலை குப்பை
எல்லாவறையும் பையில்
    சேர்த்த எதிர் சீட்டு
பயணியை பார்த்ததும்
    கிளம்பும்போது கீழே
எறிந்த துண்டு பேப்பர்
ஞாபகத்திற்கு வந்தது… 
முதல்வன் படத்தில்
    அர்ஜுன் அப்பா சொல்வது
போல வாழ்கையில் ஒரு
   rewind பட்டன்  இருந்தால்
நன்றாக இருக்கும்!!!

பயணம்


தனியாகவா செல்கின்றாய்
    என்று கேட்கும் அம்மாவிடம் 
குறிப்பிட  மறந்தேன்!!!!
   பயணம்தோறும் கூட வரும்
ஜன்னலோர நிலா தோழியை!!!

Wednesday, June 6, 2012

பேருந்து ஜன்னல்


அந்த கட்டிடத்தின் வாசலில்
 தனியாக இருந்தாள் அந்த பிஞ்சு  
அருகில் புத்தகப் பை. கன்னத்தில் கை.

வழியனுப்ப அம்மா அருகில் இல்லை
 ஏற்றிவிட அப்பா அருகில் இல்லை
கைகாட்டி கன்னம் கொஞ்சி விடை கொடுக்க
 பாட்டியும் தாத்தாவும் அருகில் இல்லை

பேருந்தின் ஜன்னல் வழி தெரிந்த காட்சியில்
 ஆயா வழியனுப்ப பள்ளிக்கு செல்லும்
என் மகள் முகம் கண்ணில் தெரிந்தது!!!

மழலை


நான் திருடன் வந்திருக்கேன்
   எனக்கு நிறைய மிட்டாய்
வேண்டுமென்று நீ சொன்னதும் 
   மழலையை உணர்ந்தேன்
மழலையாய் உணர்ந்தேன்!!!

One night at my Cousin's House

We reached my cousin's house after a long journey. It was night 10 pm and everyone were in a state to go for bed. Other reason is every one has to get ready by 5:30 next day morning for the day's plan. So without any talks or chats I went to sleep.


I was awaken by my alarm at morning 4:30. Since I donno the entire house I searched and finally found the bathroom. It was pitch dark in the morning and I was afraid to enter into the bathroom. So I just opened the door. Inserted my head and hand alone inside the room and searched for the switch. Finally found it and switched on the light. 


Suddenly I saw a figure too close to me with big eyes staring at me. I tried to scream, but my voice failed. Is it a picture? But no one will place such a horrible picture in house. All these happened in seconds. I calmed down as saw the figure again, reciting all Gods' names I know. 
.
.
.
.
.
.
And finally realized it was a mirror.