Thursday, July 8, 2021

கடல் பெண்

 நிலா மன்னவனுக்கு

    கடல் பெண்ணின் 

தொடர் தூது - கடல் அலை


மன்னவனை எண்ணி 

    அவன் துணைக்காக ஏங்கி

விடும் பெருமூச்சு - கடல்காற்று


மன்னவனின் வெண்மைக்கு

    தன்னவள் கொடுக்க

வைத்திருக்கும் அணி - ஆழ்கடல் முத்து


மன்னவனின் வருகைக்காய் 

    கத்திருந்து எண்ணிய

நாட்கள் - கரையின் மணற்துகள்


கடல்


கடல் பெண்ணே

    உன் நினைவுகளை

அலைகளாய் அனுப்புகிறாய்


அந்தோ இயற்கை 

    என்னும் கணவனுக்கு

தொடர்ந்து தூதனுப்புகிறாய்


பெண்மையை மதித்து

    உன்னிடம் செவிமடுக்க

இல்லையே பொறுமையாய்


எண்ண அலைகள்

    உள்ளே அழுத்த

வெடித்தாயோ சுனாமியாய்


பிறந்த நாள்

 இன்று நான் 

    ஜனித்த தினம்.


புது உடை 

    உடுத்த வைத்தேன்

இனிப்பு வாங்கி 

    உண்ண வைத்தேன்

சொந்தம் கூடி 

    மகிழ வைத்தேன்

எங்களுக்கு ஏன் கொண்டாட்டம்

    என்ற கேள்வி வந்தது

அதற்கு பதிலாய் 

    என் புன்னகை வந்தது


ஆம் - இன்று நான் ஜனித்த தினம்

    அது தானே என் தந்தை தாயாய்

நீங்கள் ஜனித்த தினம்!

Monday, July 5, 2021

ஒலியும் ஒளியும்

 விழியில்லா தோழிக்கு 

    ஒளியை பற்றி சந்தேகம்

மொழியில்லா தோழிக்கு

    ஒலியை அறிய ஆர்வம்


வெப்பாய் சிகப்பு

    குளிர்ச்சியாய் நீலம்

இலைதடமாய் பச்சை

    மணல் உறுத்தலாய் பழுப்பு


விழியில்லா தோழிக்கு 

    ஒளி உணர்ந்த இன்பம்

மொழியில்லா தோழிக்கு

    எப்படி தீர்ப்பேன் உன் சந்தேகம்?


Monday, August 4, 2014

என் அன்பு கணவா!!!

Report Abuse Add to Bookmarks Share

அலுவலகத் தோழி
வேலையையும் வீட்டையும்
எப்படி சமன் செய்கிறாரோ
என வருந்தும் ஒரு
நல்ல தோழனாகிறாய்!

உடன் பிறந்த சகோதரி
குடும்பத்தையும் அலுவலையும்
எப்படி சமன் செய்கிறாரோ
என ஏங்கும் ஒரு
அருமை சகோதரனாகின்றாய்!

அருமை அண்ணி
குழந்தையையும் வேலையையும்
எப்படி சமன் செய்கிறாரோ
என ஏங்கும் ஒரு
பாசமிகு உறவினனாகின்றாய்!

என் அன்பு கணவா!!!
நம் வீட்டு சமையலறை
எங்கு உள்ளது என்று
உனக்கு தெரியுமா!!!

Monday, July 23, 2012

குழந்தையும் தெய்வமும்

சில சமயங்களில் குழந்தைகள் தெய்வங்களாக தெரிவார்கள். நாம் தான் மனிதர்களாக அதை உணராமல் இருக்கிறோம்.
 
என் பெண்ணின் போர்வையை துவைத்து வைத்து இருந்தோம். அவள் அதை பார்த்து யார் செய்ததது என்று கேட்க, கலா பாட்டி என்று கூறினோம் (கலா எங்கள் வீட்டில் வேலை செய்பவர்). இவள் வேகமாக சென்று நன்றி கூறி விட்டு வந்தாள். எதற்கு என்று கேட்டதற்கு, போர்வைக்கு வாய் இல்லை தானே என்று பதில் வந்தது.
 
சின்ன ஒரு செயலில் தெய்வத்தை காட்டிய என் பெண்ணின் முன் நான் மிகவும் சிறியதாக தெரிந்தேன்.

Friday, July 20, 2012

Vipanai


“அக்கா, ஒரு புக் பத்து ரூபா தான் அக்கா. ஒண்ணு வாங்கிக்கோங்க!!! வீட்ல சின்ன பசங்க கலர் அடிக்கற புக் வாங்கிகோங்க அக்கா.”
“வேண்டாம்பா. சும்மா தொந்தரவு பண்ணாத. வேற யார் கிட்டயாச்சும் கேளு”
“அக்கா. ப்ளீஸ் அக்கா.”
“வேண்டாம்னு சொல்றேன் இல்ல. இப்போ போறியா இல்லையா”
“ச்சே. இந்த பசங்க தொல்ல தாங்கல. பஸ் வேற வந்து தொலைய மாட்டேங்குது. சீக்கிரம் வந்த வேலைய முடிச்சிட்டு சீக்கிரம் வீட்டுக்கு போலாம்”
ஸ்டாப்பில் இறங்கி வீட்டு கதவை தட்டினாள்.
“யாரு”
“மேடம். நான் சூப்பர் சோப்பு கம்பெனில இருந்து வரேன். ஒரு சோப்பு வாங்கி பாருங்க மேடம். ரொம்ப நல்லா இருக்கும்”
“வேண்டாம்மா. சும்மா தொந்தரவு பண்ணாத. வேற யார் கிட்டயாச்சும் கேளு!!!!!!”